வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி

வவுனியா வடக்கில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நடமாடும் தடுப்பூசி சேவை மூலம் இன்றையதினம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் நடமாடும் தடுப்பூசி சேவையினரால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றையதினம் (24) மூன்று தடுப்பூசிகள் அணிகள் மூலம் 128 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவை வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில் சுகாதார பரிசோதகர் மற்றும் தாதியர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இதுவரை 643 தடுப்பூசி, நடமாடும் தடுப்பூசி சேவை மூலம் வவுனியா வடக்கு மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *