மஹிந்த இராஜினாமா செய்ய தீர்மானம்?

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்க்ஷ இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராஜினாமா தொடர்பில் நாளை (04) அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகி ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளது.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *