இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவதாக சீனா அறிவிப்பு

கொழும்பு, மே 03

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் RMB (யுவான்) உதவியை சீனா அறிவித்துள்ளது.

அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள், உணவு, எரிபொருள்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய உதவியானது சீனாவின் மொத்த அவசரகால மானியத்தை 500 மில்லியன் RMB ஆக (தோராயமாக 76 மில்லியன் USD) அதிகரிக்கிறது.

“இந்த கடினமான காலங்களில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக” இந்த உதவி வழங்கப்படுவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *