நாட்டில் மீண்டும் நீண்ட நேர மின்தடையா?? விசேட அறிவிப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக தினசரி மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின்தடை காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன.

அதேவேளை நுரைச்சோலையில் உள்ள 270 மெகாவாட் மின் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் மீண்டும் நீண்ட நேர மின்தடை அமுல்ப் படுத்தப்படலாம் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகின்றன.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

நுரைச்சோலையில் உள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

CEB பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளது மற்றும் 5 நாட்களுக்குள் மீண்டும் இணைக்கப்படும் என்றும், அனல் மற்றும் ஹைட்ரோ ஆலைகளைப் பயன்படுத்தி மின்வெட்டுகளை மேலும் நீட்டிக்காமல் நிர்வகிப்பதாகவும் உறுதியளித்தது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *