
’உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க நாம் தயாரில்லை அதே போல் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் அரசாங்கத்துடன் பேச வேண்டும்’ என இடித்துரைக்கிறார் முன்நாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறிலங்கா அரசுடன் பேசுவதாக இருந்தால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் பேச வேண்டும் என்றும் ஒரு போதும் சிறிலங்கா அரசை நம்பத் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு சமம் என்றும் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்தார்.