தலவாக்கலையிலிருந்து நடை பவனியாக காலிமுகத்திடலிற்கு பயணத்தை ஆரம்பித்த தனிநபர்

தலவாக்கலையிலிருந்து தனி மனிதர், நடை பவனியாக காலிமுகத்திடலிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (03.05.2022) காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து நடைபவனியாக சென்ற அவரை கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார்.

அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *