முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் அடையாளம் காணப்படாத உந்துருளி ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மல்லாவி – திருநகர் பகுதியில் அடையாளம் காணப்படாத NP BGP 4799 இலக்கத் தகட்டை கொண்ட உந்துருளி ஒன்று வீதியில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு வீதியில் உந்துருளி ஒன்று எரிந்து சிதைவடைந்துள்ளது என்று, பிரதேச பொதுமக்களால் மல்லாவி பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னரே, பொலிசார் அவ்விடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதுவரை குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யாத நிலையில், மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


