போராட்டக்காரர்களை துரத்தியடிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சி! அம்பலமாக்கினார் சரத்

அமைதியான முறையில் அலரிமாளிகைக்கு முன்பாக ஒன்றுகூடிய நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் இறையாண்மையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இதனால், போராட்டகாரர்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டகாரர்களே, ஒன்றிணையுங்கள். அணித் திரளுங்கள். மக்களின் உரிமைகளை அடக்குமுறையாலும் பொலிஸ் பலத்தாலும் தோற்கடிக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படுங்கள்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் மைனா கோ கம என பெயரிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *