
கமு\ஸ்ரீ மாமாங்க வித்தியாலய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி கடமைகளையேற்றார்!

(செல்வராஜா டிருக்சன்)
கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி நேற்று கடமையை பொறுப்பேற்றார்.
இங்கு அதிபராக இகடமையாற்றிய .என்.உதயகுமார் இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைக்கு செல்வதனால் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி கடமைகளை கோட்டக் கல்வி அதிகாரி திரு.சரவணமுத்து முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய அதிபராக கடமையேற்றுள்ள இவர் 33வருடங்களுக்கு(1988.06.04) மேலாக கல்விச் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




