300 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கும் சீனா!

அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது.

அதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்குமென இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இது அண்ணளவாக 76 மில்லியன் அமெரிக்க டொலராகும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *