
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் கல்முனை விகாராதிபதி

-கேதீஸ்-
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அரசியல் நடப்புகள் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கல்முனை.
சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் பகிரங்க சவால் விடுத்து உள்ளார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை விகாரையில் ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரரை சந்தித்து அவர்களுடைய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.
இதை தொடர்ந்து ஊடகங்களுக்கு ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர் தெரிவித்தவை வருமாறு.
அமைச்சர் வியாளேந்த்திரன் தேர்hதலுக்கு முன்ப்பு அம்பாறை மாவட்டத்துக்கு பல முறை வந்து மக்களை நேசிக்கும் ஒருவராக மேடைகளில் முழங்கினார். குல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்தார். உறுதி மொழிகளை வழங்கினார் வென்றதன் பின்னர் அம்பாறை மாவட்ட பக்கமே வரவில்லை. தற்போது இராஜாங்க அமைச்சராகவும் உள்ளார் இங்கு எந்த சேவையும் செய்யவில்லை. இவர் மட்டக்களப்புக்கு மட்டுமா அமைச்சர்?
நான் வியாழேந்திரனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கின்றேன். அவரை மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமைச்சர் என்றுதான் நினைத்து கொண்டு இருக்கின்றார். அதனால்தான் தேர்தலுக்கு பின் அம்பாறை மாவட்டத்துக்கு வராமல் உள்ளார். இது தொடர்பாக அவர் என்னுடன் விவாதிக்கலாம்.
ஆசிரியர், அதிபர் சேவையில் கடந்த 24 வருடங்களாக நிலவி வருகின்ற சம்பள முரண்பாட்டை நீக்க அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றேன். அதே போல, பாடசாலைகள் மாணவர்களின் நலன் கருதி விரைவாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.