மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேற்கொள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கவுள்ளனர்.

சுமார் ஒரு வருட காலமாக மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாத நிலையிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், டயர், மின்கலம் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அதனால் இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி சுமார் 2 இலட்சம் ரூபாய் வரையிலான வவுச்சர்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறைமைகள் குறித்து, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு என்பன மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *