வவுனியா ஊடக அமையத்திற்கு புதிய நிர்வாகசபை தெரிவு

வவுனியா ஊடக அமையத்தின் புதிய நிர்வாக புனரமைப்பு பொதுக்கூட்டம் வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தின் பணிமனையில் இன்று இடம்பெற்றது.

முன்னதாக அமையத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஆண்டிற்கான கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டு, அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா ஊடக அமையத்தின் புதிய தலைவராக பாலநாதன் சதீசன், செயலாளராக கிருஸ்ணகோபால் வசந்தரூபன், பொருலாளராக ஜே.மதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உபதலைவராக சிவபாதம் கஜேந்தி்ரகுமார், உபசெயலாளராக பாஸ்கரன் கதீசன், போசகராக சக்திவேல்பிள்ளை பிரகாஸ்,
நிர்வாகசபை உறுப்பினர்களாக எம்.ஜி.ரட்ணகாந்தன், ந.ஜனகதீபன், எஸ் .சற்சொரூபன், ப.கார்த்தி , இ.தர்சன், சு.சசிதரன் ஆகிய ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்கள் சார்ந்த விடயங்களில் அனைவரது ஒத்துழைப்புக்களையும் பெற்று தொடர்ச்சியாக முன்னோக்கி பயணிக்கவுள்ளதாக அமையத்தின் புதிய நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *