ஏறாவூரில் மரம் முறிந்து விழுந்ததில் ஆலயம் சேதம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு அரசடி பிள்ளையார் ஆலயத்தின் மீது நேற்று இரவு வீசிய காற்றால் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆலயத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆலய மூலஸ்தானத்தின் பின் உள்ள அரச மரத்தின் பாரிய கிளையே காற்றால் ஆலயத்தின் மீது வீழ்ந்துள்ளதாக பொது மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், ஆலய மூலஸ்தானம் முற்றாகப்பாதிக்கப்டுள்ளமையுடன், ஆலயத்தின் கட்டடச் சுவர்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாலம் சுமார் 150 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஆலயம் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *