பிரான்ஸ் நாட்டு திண்மக்கழிவகற்றல் முறை தொடர்பில் யாழ். மாநகர முதல்வருக்கு விளக்கமளிப்பு

பிரான்ஸ் நாட்டில் நகரங்களில் நடைபெறும் திண்மக்கழிவகற்றல் மற்றும் மீள்சுழற்சி செயற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பிரான்ஸ் ஆர்ஜேந்தை மாநகர சபை முதல்வரின் ஏற்பாட்டில் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற AZUR என்னும் தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று இவ் கழிகவற்றல் மற்றும் மீள்சுழற்சிகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைக்குரிய கழிவற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் AZUR நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்முறை விளக்கத்திலுடன் கூடிய கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் நிறுவன இயக்குநர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

AZUR நிறுவனம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றலை மேம்படுத்த எவ்வாறான உதவிகளை தங்களால் வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *