தொலைகாட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு கூறிய விடயங்கள் தொடர்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் பொது முகாமையாளரிடம் இரண்டு புகார்கள் கையளிக்கபட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சிவில் ஆர்வலர் நிசார் மௌலானா ஆகியோரே இந்தப் புகார்களை அளித்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் மூளையாக அல்லாஹ் இருந்தார் என்று எங்களது மதத்தை இழிவாக்கி இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை தடுப்பது, மற்றொரு தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை மறைப்பது மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இது தொடர்பான தகவல்கள்களை வழங்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி பொலிஸ் பொது முகாமையாளரிடம் இந்த புகார்களை அளித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.