இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் தொடர்பாக ஒரு நிவாரணத் திட்டத்தை வழங்குமாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை செயலமர்வுக்கு இணையான கூட்டத்தில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொரோனாப் பரவல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை விளக்கும்போது வெளிவிவகார அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய அரசாங்கத்திடம் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை பெறுவதற்கு அரசாங்கம் அவதானத்தை செலுத்தியுள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக இந்த கடன் திட்டத்தை பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையால் எரிபொருள் வாங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிசக்தி அமைச்சகம் பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.