
கொழும்பு,மே 03
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் புதன்கிழமை சாவகச்சேரி நகர பகுதியில் இருந்து பயணிகள் பேருந்தில் சூட்சகமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ள பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக பேருந்துகளில் மதுபான போத்தல்களை கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
சந்தேக நபர் புகன்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

