வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் சுமார் 8 அடி நீளமான கோமராசி மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர்.
கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது என தெரியவருகிறது.
ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
