
உணவின் எதிர்காலம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச உச்சநிலைச் சந்திப்பு நியூயோர்க்கில் ஆரம்பித்துள்ளது.
சர்வதேச உணவு முறைகளை மேலும் நிலையாக வைத்துக்கொள்வதற்கான வழிகளை உலகத் தலைவர்கள் ஆராய்கின்றனர்.
கடந்த ஆண்டு மேலும் 120 மில்லியன் பேர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அவர்களையும் சேர்த்து சுமார் 770 மில்லியன் பேர் அவ்வாறு அவதிப்படுகின்றனர்.
பெரும்பாலும் அந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கு நோய்ப்பரவல் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.
கடந்த ஆண்டு, போதுமான உணவைப் பெற வழியில்லாமல் போனவர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில், சுமார் 35 வீதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.





