முச்சக்கரவண்டி ஒன்று நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





