குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்தியாவசிய சேவைகள் அல்லாத சேவைகளுக்காக பொது மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு நாள் சேவைகளில் தாமதம் ஏற்படலாமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து பணிகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *