கெக்கரிக் காய்களை மாடுகளுக்கு வழங்கிய விவசாயி!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை தற்போது நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் சந்தைப்படுத்த முடியாதமையின் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணி சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தினமும் சுமார் பத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு பிடுங்கிச் செல்வதாகவும் தெரிவித்த அவர் முடக்க நிலைக்கு முன்னர் நாளாந்தம் 500 தொடக்கம் 1000 கிலோ கிராம் வரை சந்தைப்படுத்தி வந்தாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டு வருகின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *