
அமெரிக்க அதிகாரியொருவருக்கு அனுமதியின்றி நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அஜித் நிவார்ட் கப்ரால் அனுமதியின்றி நிதி வழங்கியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
6.5 மில்லியன் ரூபா இவ்வாறு குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை அஜித் நிவார்ட் கப்ரால் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், தமக்கு எதிராக தவறாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

