திருகோணமலை, தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் க.பொ.சாதாரணதரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்று மீண்டும் மாவட்ட மட்டத்தில் மாபெரும் சாதனையை நிலை நாட்டியுள்ளது.
அதன்படி, 19 பேர் 9A சித்திகளையும் மற்றும் இணைப்பாடவிதானங்களில் பெறுபேற்றை எதிர்பாக்கும் 8 மாணவிகள் 8A சித்திகளையும் மேலும் 8 மாணவிகள் 8A 1B சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப் பெறுபேற்றை பெறுவதற்காக, கொரோனாக் காலத்தில் உழைத்த பாடசாலை சமூகத்தினருக்கும், பெற்றாருக்கும், மாணவர்களுக்கும், மாகாண, வலய கல்வி திணைக்களங்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





