யாழ். வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக திறப்பு விழா இன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது.
தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவை சேனாதிராசா,
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் உதயகுமார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சுலோசனா முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கௌரவ விருந்தினர்களாக பண்டத்தரிப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் விசுவநாதர் சுப்ரமணியம், வட மாகாண கல்வி மையத்தின் தலைவர் வினாயகமூர்த்தி சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





