தமிழர்களை சிதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நினைவு கூரப்பட்டது.
இதில் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை, இன்றைய தினம் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
