வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று ( 25 ) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .
இடைக்கால பருவ மழை மாலை வேளைகளில் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இன்று 25 ஆம் திகதி அதிகாலை 8 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 117.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . இடைக்கால பருவ மழை இன்னும் சில தினங்கள் நீடிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
அத்துடன் இடி மின்னல் அதிகரிக்கும் நிலைமைகளும் காணப்படுகின்றன பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார் .







