
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அமைச்சரவை மீண்டும் மாற்றம் வீரசேகரவின் பதவிக்கு ஆபத்து!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட்டு, அமைச்சர்களுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தாலும் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனத் தெரியவருகின்றது. முக்கியமான சில அமைச்சு பதவிகள் மாறவுள்ளதுடன், சிலரின் அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன. பிரதானமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து சரத் வீரசேகர நீக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.




