
நாடு மீண்டும் திறக்கப்படும் போது பொதுப் போக்குவரத்தில்
மிகக்கூடுதலான கவனம் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளார் தெரிவிப்பு!
நாடு மீண்டும் திறக்கப்படும்போது பொதுப்போக்குவரத்துச் சேவைகளை கடுமையான முறையில் மேற்கொள்ளத் தவறினால் நாட்டில் மேலும் கொரோனாத் தொற்று பரவலடையும் என்று சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளாரான மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவது தொடர்பான அறிவிப்புக்கு முன்னர் போக்குவரத்து அதிகாரிகள் திட்டத்தை முன்னதாக அறிவித்தால் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
நாளாந்தம் பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்கள் குறைக்கப்பட்டாலும், நாட்டில் இன்னும் ஆபத்து உள்ளது.
எனவே பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும்.எதிர்காலத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும்- என்றார்.




