முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள், தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் உறுப்பினர் இராசையா பார்த்தீபனை (திலீபன்) நினைவு கூறல் நிகழ்வுகளை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, அன்ரன் ஜெகநாதன் உள்ளிட்டவர்களுக்கு குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவுக்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிவான்; திரு. ரி.சரவணராஜா கட்டளையிட்டுள்ளார்.
இந் நிலையில், குறித்த தடையுத்தரவை முல்லைத்தீவு பொலிஸ்; நிலையப் பொறுப்பதிகாரி இந் நான்கு பேருடைய இல்லத்திற்கும்; சென்று கையளித்துள்ளார்.
மேலும், முல்லைத்தீவு பொலிஸார்;, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





