இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிச்சையாக துன்புறுத்தப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் இழைக்கப்பட்ட அநீதிக்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் போக்குவரத்து அமைச்சருமான சாம் டாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா போன்றோருக்கு பிரித்தானிய அரசு தடை விதிக்க வேண்டும்.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 30ஃ1 தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை உடன்படும்வரை அல்லது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க உடன்படும் வரை இலங்கை மீது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் சாம் டாரி கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் நான் என ஒற்றுமையை பகிர்ந்;து கொள்கிறேன். தங்களுக்கு எதிராக புரியப்பட்ட அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், சுயநிர்ணய உரிமை கோரியும் தொடர்ச்சியாக இடம்பெறும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் எனவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் போக்குவரத்து அமைச்சருமான சாம் டாரி கூறியுள்ளார்.





