
வட்டு. பொலிஸ் மீது நம்பிக்கையில்லை பிரதேச சபை அமர்வில் சுட்டிக்காட்டு!
வட்டுக்கோட்டை பொலிஸாரின் மீதிருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர் என்று நேற்றுமுன்தினம் நடந்த வலிகாமம் மேற்கு பிரதேச சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் பொன்ராசா இது தொடர்பில் தெரிவித்ததாவது- வலி. மேற்கு பிரதேச மக்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வழக்குகளைப் பதிவு செய்யாமல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலேயே தற்சமயம் முறைப்பாடு வழங்குகின்றனர்.
வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுக்கப்படும் சந்தேகநபர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் வெளியே உலாவுகின்றனர். இதனாலேயே மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.- என்று சுட்டிக்காட்டினார்.




