சட்டப்பூர்வ உரிமம் இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 250 ஒக்ஸி மீற்றர்களை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம், அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன,; இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொல்கசோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விமானப் படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க இலங்கை விமானப் படையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.





