யாழ்ப்பாணம் – சட்டநாதர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சட்டநாதர் வீதியிலுள்ள வீட்டின் முன் நின்று இருவர் உரையாடிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
வீட்டையும் தாக்கி சேதம் விளைவித்ததுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சேதமாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோப்பாய் பிரிவில் உள்ள நாடன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில், யாழ்ப்பாணம், திராணவெளி கிழக்கு, புதிய செங்குந்தா வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

