கல்முனையில் தமிழருக்கு எதிரான இனவாத செயல் ஒன்று அரங்கேற்றம் – காணிப்பதிவு அலுவலகத்தில் இருந்து கல்முனை வடக்கு செயலக காணிப் பிரிவு நீக்கப்பட்டது

கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்தது.
13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கல்முனை காணி பதிவகம் இயங்கி வருகிறது.

காணி பதிவகத்தின் கீழ் கல்முனை வடக்கு செயலக பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் பதிவு செய்யப்பட்டு வந்தது.

கல்முனையின் இன வாதத்தையும், இன குரோதத்தையும் விதைத்து அரசியல் செய்து வரும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உரிய பதிவு நடவடிக்கை அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.

பதிவாளர் நாயகத்தின் கடித்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் வேளையில், இந்த விடயம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் இன விரிசலை மேலும் வலுப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *