மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் நகரில் இன்றைய தினம்(05) பகல் 1.00 மணிக்கு துண்டுபிரசுர விநியோகம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக ஜேவிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ;
நாளைய தினம் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டம் இடம்பெற உள்ளது.
இந்த மக்கள் போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாங்கள் எமது பூரணமான ஆதரவினை வழங்குவோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிழ்ச்சங்கங்கள் ,சிவில் அமைப்புக்கள் மாணவர் அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டினுடைய மக்களை வதைக்கின்ற கொலைகார ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புகின்ற நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாகவே இந்த ஹர்த்தால் போராடடம் இடம்பெற உள்ளது.
மேலும் இந்நாட்டு மக்கள்’ Gota go home ‘என்று கூறுகிறார்கள். இந்த அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம் என்கிறார்கள் ஆனாலும் இந்த கொலைகார கும்பல் முழு நாட்டையும் திருடி சூறையாடி கொளுத்து வாங்கிக்கொண்டிருக்கின்ற இந்த குடும்ப ஆட்சி சர்வாதிகார போக்கின் மூலமாக மக்களின் வாழ்க்கையினை சீரழித்து வருகின்றன.
இந்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் விலைவாசினை தாங்கிக்கொள்ள முடியாது .
எனவே நாளைய தினம் அனைவரும் இப்போராடடத்தில் கலந்து கொள்ளுங்கள்.
கறுப்புக்கொடிகள் ஏந்தி சந்திகள்,நகரங்களில் போராடி எதிர்ப்பினை தெரிவியுங்கள். வியாபாரிகள் அனைவரும் கடைகளை பூட்டுங்கள் .
மேலும் நாளைய தினம் இ.போ.ச போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்து முற்றாக செயலிழக்கப்படவுள்ளது என அனைத்து அரசாங்க சேவைகளும் செயலிழக்கப்படவுள்ளது.
இந்த அரசாங்கத்திற்கு இறுதியான எச்சரிக்கையினை தெரிவிக்கவேண்டிய தேவை உள்ளது.
எனவே நாளைய தினம் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவிமடுக்காமல் விட்டால் எதிர்வரும் 11 ஆம் திகதிகளில் இருந்து முழு நாடும் தொடர்ச்சியான ஸ்தம்பித நிலைக்கு உள்ளாக்கப்படும் என்றார்.


