மஹிந்த அடுத்தவாரம் சிங்கப்பூர் பயணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம், மருத்துவத் தேவைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை மீது சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது வேறு இலங்கைப் பிரஜைகளையோ சிங்கப்பூர் அரசாங்கம் தற்போதைக்கு நாட்டினுள் ஏற்பதாக இல்லை.

எனினும், நீண்ட நாட்கள் இலங்கை, சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வெறும் ஐந்து பேருக்கு மாத்திரமே அங்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பணிக்குழுவின் தலைவர் யோஷித ராஜபக்ஷ மற்றும் மூன்று பேர் அடுத்தவாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *