வவுனியா பாவற்குளம் கணேசுவரா வித்தியாலயத்தில் கல்விபயின்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் வழிப்படுத்தலிலும் ஆதரவுடனும் ஆறு இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பாவற்குளம் கணேசுவரா மாகவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஊடாக குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான கொரோனா நோயாளிகளுக்குரிய 5 விசேட கட்டில்களும் 150 ஒட்சிசன் மாஸ்க் ஆகியன வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.





