டெல்டா தொற்றினால் 1000 மடங்கு பாதிப்பு உறுதி

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை விட டெல்டா தொற்றினால் உள்ளானவர்களுக்கு 1000 மடங்கு பாதிப்பு அதிகமாகும் என்று சீனாவில் ஆய்வொன்றில் இனங்காணப்பட்டள்ளதான ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த ஆய்வு முடிவின் அடிப்படையில் டெல்டா திரிபானது பெருமளவான மக்களை தாக்கக் கூடியது என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி டுவிட்டர் பதிவொன்றைச் செய்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் டெல்டா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கொவிட் தடுப்பூசிகளை இரு கட்டங்களாகவும் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

அத்தோடு டெல்டா தொற்றுக்கு எதிரான சிறந்த தடுப்பூசியாக தமது ஆய்வில் இனங்காணப்பட்டுள்ள சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது சிறந்தாகும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *