மித்தெனிய, லெனரேல் தோட்டத்தில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரப்படையினரால் நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
48 வயதுடைய வத்தள பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்காக 90 தோட்டாக்கள் மற்றும் கேரள கஞ்சா 52.380 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





