நாட்டில் மேலும் 782 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 512,154 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 12,530 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.





