அம்பாறை பானம பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஐக்கிய மக்கள் சக்தியால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 27ஆவது கட்டமாக, 21இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பானம பிரதேச மருத்துவனையின் நிலையப் பொறுப்பு மருத்துவ உத்தியோகத்தர் பீ.எம்.ஆர்.எஸ். பஸ்நாயக்க குறித்த நன்கொடையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 2 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த 2 Patient Monitor இயந்திரங்கள், 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த CTG Machine இயந்திரமொன்று மற்றும் 12 இலட்சம் ரூபா பெறுமதியான efibrillator இயந்திரமொன்றும் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஹசன் அலி, அதன் இணை அமைப்பாளர் கயான் தர்ஷன, லாஹுகல பிரதேச சபை உறுப்பினர் பாட்டலி ரோஹண கயந்த உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 26 கட்டங்களில் 784 இலட்சம் (ரூபா 78,494,000) பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *