யாழ்.வல்லைப்பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் தானாக முன்வந்து சரணடைந்த இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்த நிலையில் மற்றொருவர் நெல்லியடி பொலிஸில் சரணடைந்திருந்தார்.
குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய நிலையில் அவர்களை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.