கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகம் இன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
அதையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்திற்குச் சென்றுள்ளார்.
நாளையதினம் தீலீபனின் நினைவேந்தல் நிகழ்வை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும்,இந்நிகழ்வை காரியாலயத்தில் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனாலேயே இங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





