நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு எதிரில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று மொடர்னா கொரோனா தடுப்பூசியைக் கோரியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அங்கு நின்ற இராணுவ அதிகாரி ஒருவர், அந்த மாணவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின், மாணவர்களுக்கும் அங்கிருந்த இராணுவ குழுவினருக்கும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், களனி பல்கலைக்கழகத்தின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தடுப்பூசிக்கு வந்ததாகவும், அதில் மாணவர்களுக்கு இன்று மற்றும் நாளை காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மொடர்னா தடுப்பூசி போடப்படும் என்று உள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இங்கு தடுப்பூசி வழங்கப்படாது எனவும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல கடவுச்சீட்டுடன் வந்த சில மாணவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி வழங்கப்பட்டது என்றும் இராணுவ அதிகாரி மாணவர்களுக்கு தெரிவித்தார்.





