
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாட்டைத் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனினும் 30ம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.




