முல்லையில் தியாகி திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்க 24 பேருக்கு தடை!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்கள் ஊடக 24 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் ஊடாக பெற்ற தடையுத்தரவுகளை இன்று சனிக்கிழமை பொலிசார் உரியவர்களிடம் கையளித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை,புதுக்குடியிருப்பு,மாங்குளம்,மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் இந்த தடை உத்தரவுகள் பெறப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் முல்லைத்தீவு பொலிசாரால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா .ரவிகரன்,எம்.கே.சிவாஜிலிங்கம், அன்ரன் ஜெகநாதன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மரியசுரேஷ் .ஈஸ்வரி நான்கு பேருக்கும்

முள்ளியவளை பொலிசாரால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் சுமித்கட்சன் .சந்திரலீலா,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான தவராசா அமலன்,இரத்தினம்.ஜெகதீஸ்வரன்,கனகையா.தவராசா,திருச்செல்வம் ரவீந்திரன் ,சின்னராசா லோகேஸ்வரன், மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான இராஜசேகரம்.இராசம்மா, பகீரதன் .ஜெகதீஸ்வரன், ஞானதாஸ் .யூட்பிரசாத்,காளிமுத்து .சண்முகம் ஆகிய பதினோரு பேருக்கும்

அத்தோடு புதுக்குடியிருப்பு பொலிசாரால் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் மற்றும் முருகுப்பிள்ளை பார்த்தீபன் உள்ளிட்ட இருவருக்கும்

மாங்குளம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா.கஜேந்திரன், மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் .கிந்துஜன்,ரகுநாதன் .துஷ்யந்தன்,புன்சிதபாதம்.ரவீந்திரன் அல்லது ரவி மாஸ்ரர் ,ராசமணி .சிவராசா அல்லது ரவி ,மகாதேவன் .ரூபானந் உள்ளிட்ட ஏழு பேருக்கும்

மல்லாவி பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா.கஜேந்திரன், மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் .கிந்துஜன்,ரகுநாதன் .துஷ்யந்தன்,புன்சிதபாதம்.ரவீந்திரன் அல்லது ரவி மாஸ்ரர் ,ராசமணி .சிவராசா அல்லது ரவி ,மகாதேவன் .ரூபானந் உள்ளிட்ட ஏழு பேருக்குமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேருக்கு தடையுத்தரவுகள் பெற்றுக்கொண்டு அதனை இன்று உரியவர்களிடம் பொலிசார் கையளித்துள்ளனர்.

மேலும் குறித்த தடையுத்தரவில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிசார் அறிக்கை செய்துள்ளனர்.எனவும்

எனவே நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன். எனக் குறித்த நீதிமன்றத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *