
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 374 ரூபா 99 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 72 சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 375 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 330 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.