இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்து 155 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகூடிய தொகையாக 2 ஆயிரத்து 975 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 215 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 891 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 572 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.